பல்கலைக்கழக மாணவர்களுக்கு மகாபொல கொடுப்பனவு 10,000 ரூபாவாக அதிகரிக்க முயற்சி!!
பல்கலைக்கழக மாணவர்களுக்கு வழங்கப்படும் மகாபொல புலமைப்பரிசில் கொடுப்பனவை 10,000 ரூபாவாக உயர்த்துவதற்கு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க உத்தேசித்துள்ளார்.
தற்போது 5,000 ரூபா வழங்கப்பட்டு வரும் நிலையில், ஏப்ரல் மாதம் முதல் இது 7,500 ரூபாவாக அதிகரிக்கப்பட உள்ளது. அதற்கும் மேலாக, 10,000 ரூபாவாக அதிகரிக்க சாத்தியக்கூறுகள் குறித்து ஜனாதிபதி, நிதியமைச்சின் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டுள்ளார்.
இந்த திட்டம், மாணவர்களின் பொருளாதார நிலையை மேம்படுத்தும் நடவடிக்கையாகக் கருதப்படுகிறது.
0 Comments