ரஜினியின் ஜெயிலர் 2 படத்தில் KGF பட நடிகை!!
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் கேரியரில் மிகப்பெரிய வசூலை அடைந்த திரைப்படமாக 'ஜெயிலர்' படமானது 2023ஆம் ஆண்டு வெளியானபோது அசத்தலான வெற்றி பெற்றது.
இப்படத்தை இயக்கியவர் பிரபல இயக்குனர் நெல்சன் திலீப்குமார். சன் பிக்சர்ஸ் நிறுவனத்தினால் தயாரிக்கப்பட்ட இத்திரைப்படம், ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.
முதல் பாகத்தின் வெற்றியை முன்னிட்டு இரண்டாம் பாகத்தை எடுக்க திட்டமிட்டுள்ளார்.ஜெயிலர் படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு மார்ச் முதல் தொடங்கும் என்றும், படத்தின் புரோமோ படப்பிடிப்பு சமீபத்தில் எடுத்து முடிக்கப்பட்டுள்ளது. படத்தில், பிரபலமான 'KGF' படத்தின் கதாநாயகி ஸ்ரீநிதி ஷெட்டி முக்கிய வேடத்தில் நடிக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
KGF' படத்தின் வெற்றிக்கு பிறகு, ஸ்ரீநிதி ஷெட்டி தமிழ் சினிமாவில் இந்த படத்தின் மூலம் அறிமுகமாகிறார்.
0 Comments