2025 ஆம் ஆண்டில் பாடசாலை நாட்கள் 181 ஆக குறைக்கப்படும்: கல்வி அமைச்சின் அறிவிப்பு!!
அடுத்த ஆண்டுக்கான பாடசாலை நாட்களின் எண்ணிக்கையை 210 நாட்களிலிருந்து 181 நாட்களாக குறைக்க கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.
அதிகளவிலான அரசு விடுமுறைகள்.
2025 ஆம் ஆண்டு கல்வியாண்டின் முதல் தவணை தாமதமாக ஆரம்பிக்கப்படுவது.
அரசுப் பாடசாலைகளும், தனியார் பாடசாலைகளும் இந்த மாற்றத்திற்கு உட்படுத்தப்படுகின்றன.
2024 ஆம் ஆண்டுக்கான மூன்றாம் தவணை:
ஜனவரி 2 முதல் ஜனவரி 24 வரை நடைபெறவுள்ளது.
2025 கல்வியாண்டு:
தொழில்நுட்ப ரீதியாக ஜனவரி 27 ஆம் திகதி ஆரம்பமாகும்.
2025 ஆம் ஆண்டில் மொத்தம் 26 பொது விடுமுறைகள் உள்ளன.
இதில் 4 நாட்கள் மட்டுமே வார இறுதி நாட்களாக அமைந்துள்ளன.
ஏனைய விடுமுறை நாட்கள் வாரநாட்களாக இருப்பதால் பாடசாலை நாட்களை குறைப்பது அவசியமாகியுள்ளது.
இந்த மாற்றங்கள் கல்வி நெறிகள் மற்றும் பருவ முடிவுகளைப் பராமரிக்க மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
_Srilanka Tamil News_
0 Comments