Ticker

10/recent/ticker-posts

2025 ஆம் ஆண்டு முதலாம் தர வகுப்புகள் மற்றும் பாடசாலை நடவடிக்கைகள் தொடர்பான அறிவிப்பு!!

 2025 ஆம் ஆண்டு முதலாம் தர வகுப்புகள் மற்றும் பாடசாலை நடவடிக்கைகள் தொடர்பான அறிவிப்பு!!

2025 ஆம் ஆண்டுக்கான அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகள் தொடர்பில் கல்வி அமைச்சு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.


அதன்படி, முதலாம் தர வகுப்புகள் சிங்கள, தமிழ், மற்றும் முஸ்லிம் பாடசாலைகளில் ஜனவரி 30, 2025 (வியாழக்கிழமை) ஆரம்பமாகும்.

மேலும், அரச மற்றும் அனுமதிப்பெற்ற தனியார் பாடசாலைகளின் மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்டம் ஜனவரி 2, 2025 முதல் ஆரம்பமாகும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன், மூன்றாம் தவணை அனைத்து பாடசாலைகளிலும் ஜனவரி 24, 2025 அன்று நிறைவடையும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

கல்வி அமைச்சு பெற்றோர்களுக்கும் மாணவர்களுக்கும் இந்த தகவல்களை முன்கூட்டியே அறியச் செய்து, தேவையான ஏற்பாடுகளைச் செய்யுமாறு கேட்டுக்கொண்டுள்ளது.

_Srilanka Tamil News_

Post a Comment

0 Comments