எரிபொருளின் விலையில் இன்று மாற்றம்: எதிர்பார்க்கப்படும் திருத்தம்!!
நாட்டில் எரிபொருளின் விலையில் இன்று மாற்றம் ஏற்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. மாதாந்திர விலை திருத்தத்தின் அடிப்படையில், எரிபொருளின் விலையில் முக்கிய மாற்றங்கள் செய்யப்படலாம்.
கடந்த நவம்பர் 30ஆம் தேதி நள்ளிரவில், எரிபொருளின் விலையில் ஏற்கனவே திருத்தம் செய்யப்பட்டிருந்தது. அதன்படி:
ஒக்டேன் 92 ரக பெட்ரோல் லிட்டரின் விலை 2 ரூபாவால் குறைக்கப்பட்டது.
ஒட்டோ டீசல் லிட்டரின் விலை 3 ரூபாவால் உயர்த்தப்பட்டது.
மண்ணெண்ணெய்யின் விலை 5 ரூபாவால் அதிகரிக்கப்பட்டது.
ஒக்டேன் 95 ரக பெட்ரோல் மற்றும் சுப்பர் டீசல் ஆகியவற்றின் விலைகளில் எந்தவொரு மாற்றமும் செய்யப்படவில்லை.
_Srilanka Tamil News_
0 Comments