70 சதவீதமாக அதிகரிக்கப்படவுள்ள தொடருந்து சேவை!!
இலங்கை தொடருந்து திணைக்களத்தின் புதிய பொது முகாமையாளராக (General Manager of Sri Lanka Railways) தம்மிக்க ஜெயசுந்தர (Dhammika Jayasundara) நேற்று (டிசம்பர் 26) பொறுப்பேற்றார். புதிய பொறுப்பை ஏற்றுக்கொண்ட பிறகு அவர் ஊடகங்களுக்கு பேட்டியளிக்கையிலே, நாட்டின் தொடருந்து சேவைகளை நாளாந்தம் 70% அதிகரிக்க திட்டமிட்டுள்ளதாக அறிவித்தார்.
தம்மிக்க ஜெயசுந்தரா, நாட்டின் தொடருந்து சேவையின் வளர்ச்சி மற்றும் பயணிகள் வசதிகளை மேம்படுத்த முக்கியமான நடவடிக்கைகளை மேற்கொள்ளப் போவதாக குறிப்பிட்டார்.
தம்மிக்க ஜெயசுந்தரா மேலும் கூறுகையில், இந்த திட்டம் மாகாணங்களுக்கிடையேயான போக்குவரத்தையும், பெருநகரங்களின் தினசரி போக்குவரத்தையும் எளிதாக்கும் என்று நம்பப்படுகிறது. மேலும், சரக்கு போக்குவரத்து சேவைகளையும் விரிவுபடுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என தெரிவித்தார்.
தொடருந்து துறைக்குள் சில சிக்கல்களும் உள்ளன. அவற்றை விரைவில் நிவர்த்தி செய்து அடுத்தகட்ட நடவடிக்கைகளை முன்னெடுப்போம்“ என தெரிவித்தார்.
0 Comments