Ticker

10/recent/ticker-posts

அவுஸ்திரேலியா நீதிமன்றால் இலங்கையருக்கு விதிக்கப்பட்ட கடூழிய சிறைத் தண்டனை!

 அவுஸ்திரேலியா நீதிமன்றால் இலங்கையருக்கு விதிக்கப்பட்ட கடூழிய சிறைத் தண்டனை!

அவுஸ்திரேலியாவின் மெல்பேர்னில்( Australia – Melbourne) வசித்த இலங்கையர் ஒருவருக்கு 37 ஆண்டுகால சிறைதண்டனையை விதித்து அந்நாட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

தாயொருவரை தனது வீட்டில் வைத்து கூரிய ஆயுதத்தால் குத்தி படுகொலை செய்த குற்றச்சாட்டின் பேரில் குறித்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

44 வயதான மூன்று பிள்ளைகளின் தாயான நெலோமி பெரேரா என்பரே சம்பவத்தில் படுகொலை செய்யப்பட்டார்.

இந்நிலையில், 45 வயதான தினுஷ் குரேரா என்ற அவரது கணவர் குடும்பத்துடன் பிரிந்து வாழ்ந்து வந்த நிலையில் வீட்டுக்கு வந்து கொலையை செய்ததாக பொலிஸார் நீதிமன்றத்திற்கு தெரிவித்து ஆவணங்களை சமர்ப்பித்துள்ளனர்.


குறித்த இலங்கைப் பெண் தனது பிள்ளைகளின் முன்னிலையில் கொல்லப்பட்டபோது, ​​உதவிக்காக அவர் அலறுவது அவரது கைக்கடிகாரத்தில் பதிவாகியுள்ளது.

அந்த குரல் பதிவு நீதிமன்றத்தில் ஒலிபரப்பப்பட்டது. தினுஷ் குரேரா தனது 43 வயது மனைவியைக் கொன்றதாகவும், தப்பிச் செல்ல முயன்ற தனது மகனையும் தாக்கியதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில், கொலை நடப்பதற்கு சில தினங்களுக்கு முன்னர், சந்தேக நபர் இலங்கையிலிருந்து மெல்பேர்ன் திரும்பியதாக கூறப்படுகிறது.

இவரின் மோசடி நடவடிக்கைகளினால் குறித்த பெண் தமது திருமண உறவை முடித்துக் கொண்டுள்ளதாக சட்டத்தரணிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

கொலையின் பின்னர் தம்பதியினரின் 17 வயது மகன் மற்றும் 16 வயது மகளும் சந்தேக நபரால் அச்சுறுத்தப்பட்டுள்ளனர்.

மேலும் அவர்கள் பொலிஸாரை அழைத்தால் அல்லது வெளியேற முயன்றால், வீட்டிற்கு தீ வைத்து அனைவரையும் கொன்றுவிடுவேன் என்று மிரட்டியுள்ளார்.

அத்தோடு குற்றவாளி தனது மனைவியைத் தாக்கியதில் அவரது உடல் உறுப்புகளில் 35 காயங்கள் ஏற்பட்டுள்ளளதாகவும் நீதிமன்றத்திற்னு தெரிவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


-Srilanka Tamil News

Post a Comment

0 Comments