சர்வதேச வர்த்தகத்தில் Bitcoin-ஐ பயன்படுத்த தொடங்கிய ரஷ்யா!!
ரஷ்யா, சர்வதேச பொருளாதார தடைகளை எதிர்கொள்வதற்கான உத்தியாக டிஜிட்டல் நாணயங்களை சட்டரீதியாக வர்த்தகத்தில் பயன்படுத்த தொடங்கியுள்ளது. இந்த ஆண்டு, பிட்காயின் உற்பத்தி (mining) மற்றும் அதன் பரிமாற்றங்களை சட்டப்பூர்வமாக்கிய ரஷ்யா, உலக வர்த்தகத்தில் புதிய பாதையை உருவாக்க முயற்சி செய்து வருகிறது.
ரஷ்ய நிதி அமைச்சர் ஆன்டன் சிலுவானோவ், Russia 24 தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில்,ரஷ்யாவில் உற்பத்தியாகும் பிட்காயின்கள் மூலம் சோதனை பரிவர்த்தனைகள் நடைபெற்றுவருவதை உறுதிப்படுத்தினார்.இதனை விரிவுபடுத்தும் முயற்சிகள் தற்போது தீவிரமாக நடைப்பெற்றுள்ளன என்றும் கூறினார்.
இது மட்டுமல்லாது, "டிஜிட்டல் நாணயங்கள் சர்வதேச பரிவர்த்தனைகளின் எதிர்காலமாக இருக்கும்" என்ற நம்பிக்கையுடன், ரஷ்யா தனது பொருளாதார வளர்ச்சிக்கான புதிய வாயில்களைத் திறக்க விழைகிறது.
இந்த முயற்சிகள், ரஷ்யாவின் சர்வதேச வர்த்தக அடையாளத்தை புதிய நிலைக்கு உயர்த்தும் என்று வல்லுநர்கள் கருதுகின்றனர். பிட்காயின் மற்றும் டிஜிட்டல் நாணயங்கள், நவீன தொழில்நுட்ப உலகில், வியாபாரத்தின் இன்றியமையாத சக்தியாக உருவெடுக்கின்றன.
0 Comments