Ticker

10/recent/ticker-posts

பருத்தித்துறை வைத்தியசாலையில் மேலும் பலர் எலிக்காய்ச்சல் அறிகுறிகளுடன் அனுமதி

 

பருத்தித்துறை வைத்தியசாலையில் மேலும் பலர் எலிக்காய்ச்சல் அறிகுறிகளுடன் அனுமதி!


பருத்தித்துறை வைத்தியசாலையில் மேலும் 14 பேர் பலர் எலிக்காய்ச்சல் வைரஸ் அறிகுறிகளுடன் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவர்களில் ஒருவர் மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.கடந்த நவம்பர் மாதத்தில் எலிக்காய்ச்சல் வைரஸ் அறிகுறிகளுடன் 5 பேர் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டிருந்தனர். அவர்களில் ஒருவர் கடந்த வாரம் உயிரிழந்துள்ளார்.


இதேவேளை, பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் எலிக்காய்ச்சல் வைரஸ் அறிகுறிகளுடன் சேர்க்கப்பட்டிருந்த நோயாளர்களில் சிலர், யாழ். போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு அங்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.


நேற்று இரவு 8 மணி வரையான நிலவரத்தின் அடிப்படையில் 39 பேர் எலிக்காய்ச்சல் வைரஸ் அறிகுறிகளுடன் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையின் விடுதிகளில் தங்கியிருந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.  

Post a Comment

0 Comments