அனைத்து அரச நிறுவனங்களுக்கும் புதிய ஆண்டின் அதிகாரபூர்வ தொடக்க நிகழ்வு!!
நாளைய தினம் நாடளாவிய ரீதியில் அனைத்து அரச நிறுவனங்களும் புதிய ஆண்டின் அதிகாரபூர்வ தொடக்க நிகழ்வை மேற்கொள்ள உள்ளதாக பொதுநிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக, அமைச்சின் செயலாளர் எஸ். ஆலோக பண்டார வெளியிட்ட அறிக்கையில், புதிய வருடத்தில் "தூய்மையான இலங்கை" தேசிய வேலைத்திட்டம் முக்கிய முன்னெடுப்பாக அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
நிகழ்வு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையில் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெறும்.
அரச மற்றும் தனியார் துறைகளின் ஒத்துழைப்புடன் தூய்மையான இலங்கை திட்டம் நாடு முழுவதும் செயல்படுத்தப்படும்.
அனைத்து அரச ஊழியர்களும் தங்களது பணியிடங்களில் இந்த திட்டத்தை முன்னெடுத்து செயல்பட வேண்டும்.
அரச மற்றும் தனியார் ஊடகங்கள் மூலம் இந்நிகழ்வு நேரலையில் ஒளிபரப்பப்படும்.
அதனைப் பார்வையிட அனைத்து அரச நிறுவனங்களின் ஊழியர்களுக்கும் தேவையான வசதிகள் ஏற்படுத்தப்படும்.
தூய்மையான இலங்கை உறுதிமொழி:
அரச ஊழியர்கள் அனைவரும் நேரலையில் தூய்மையான இலங்கை உறுதிமொழியை வாசிக்க அரசாங்கம் அழைப்பு விடுத்துள்ளது.
இந்த திட்டத்தின் மூலம் புதிய ஆண்டின் தொடக்கத்திலேயே சுத்தம் மற்றும் ஒழுங்கு ஆகியவை அதிக முக்கியத்துவம் பெறும் வகையில் நாடு முழுவதும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
_Srilanka Tamil News_
0 Comments