Ticker

10/recent/ticker-posts

இலங்கைக்கு வருகை தருமாறு மோடிக்கு அழைப்பு விடுத்த ஜனாதிபதி

 

இலங்கைக்கு வருகை தருமாறு மோடிக்கு அழைப்பு விடுத்த ஜனாதிபதி

வருகை தருமாறு இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

தாம் பிரதமர் நரேந்திர மோடிக்கு முழு ஒத்துழைப்பையும் வழங்குவதாக இலங்கையின் அநுரகுமார திசாநாயக்க உறுதியளித்துள்ளார்.

இந்தியா எப்போதும் இலங்கைக்கு உதவி வருகிறது என்றும், இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையில் இலங்கை நாடு மிகவும் குறிப்பிடத்தக்க இடத்தைப் பிடித்துள்ளது என்றும் திசாநாயக்க கூறியுள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடியுடனான கூட்டு செய்தியாளர் சந்திப்பின்போது, இந்த விடயங்களை ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

இந்தநிலையில், இந்தியாவின் நலனுக்கு தீங்கு விளைவிக்கும் வகையில், இலங்கை மண்ணை எந்த வகையிலும் பயன்படுத்த அனுமதிக்கப்போவதில்லை என்று தாம் இந்தியப் பிரதமருக்கு உறுதியளித்துள்ளதாகவும் அநுரகுமார தெரிவித்துள்ளார்.


இலங்கையின் நிதி நெருக்கடியின் போது இந்தியா அளித்த உதவியை நினைவு கூர்ந்த திசாநாயக்க, சுமார் 2 ஆண்டுகளுக்கு முன்னர், இலங்கை முன்னெப்போதும் இல்லாத பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டது.

இதன்போது, அதிலிருந்து வெளியேற இந்தியா, இலங்கைக்கு மிகுந்த ஆதரவளித்தது. அதன் பிறகு, குறிப்பாக கடன் இல்லாத கட்டமைப்பு செயல்பாட்டில் இலங்கைக்கு பெரிதும் உதவியது.

இந்தநிலையில், இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையில் இலங்கை மிகவும் குறிப்பிடத்தக்க இடத்தைப் பெற்றுள்ளது என்று குறிப்பிட்டுள்ள அநுரகுமார, பிரதமர் மோடி, இலங்கைக்கு முழு ஆதரவை உறுதி செய்துள்ளார்.


இதற்கிடையில் இந்திய பிரதமர் இலங்கைக்கு விஜயம் செய்யவேண்டும் என்ற அழைப்பையும் அனுரகுமார விடுத்துள்ளார். இந்த நிகழ்வில் பேசிய பிரதமர் மோடி, எதிர்வரும் காலங்களில் இரு நாடுகளும் தங்கள் இணைப்பை அதிகரிக்கும் என்று கூறியுள்ளார்.

பயணிகள் கப்பல் சேவையும் சென்னை-யாழ்ப்பாணம் விமான இணைப்பும் சுற்றுலாவை மேம்படுத்தி, இரண்டு நாடுகளிடையேயும் கலாசார உறவுகளை வலுப்படுத்தியுள்ளன என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில் இரண்டு நாடுகளுக்கும் இடையில் சில உடன்படிக்கைகளும் இன்று கைச்சாத்திடப்பட்டுள்ளன. 



Post a Comment

0 Comments