இங்கிலாந்து அணிக்கு எதிராக ஆதிக்கம் செலுத்தும் நியூஸிலாந்து அணி
சுற்றுலா இங்கிலாந்து அணிக்கும் நியூஸிலாந்து அணிக்கும் இடையிலான க்ரோவ் - தோர்ப் கிண்ண மூன்றாவது போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டம் நேற்று இடம்பெற்றது.
இந்தநிலையில், ஆட்டம் நிறுத்தப்பட்டவேளையில், நியூஸிலாந்து அணி, தமது இரண்டாம் இன்னிங்ஸில், 3 விக்கட்டுக்களை இழந்து 136 ஓட்டங்களை பெற்றிருந்தது.
இதன் அடிப்படையில் அந்த அணி இங்கிலாந்து அணியைக்காட்டிலும், 340 ஓட்டங்களால் முன்னிலையில் உள்ளது. முன்னதாக அந்த அணி, தமது முதல் இன்னிங்ஸில் 347 ஓட்டங்களை பெற்றிருந்தது.
எனினும், முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் ஆதிக்கம் செலுத்தி அந்த போட்டிகளில் வெற்றி பெற்ற இங்கிலாந்து, அணி, இந்தப்போட்டியின் முதல் இன்னிங்ஸில், 143 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்தது.
இந்நிலையில், போட்டியின் மூன்றாம் நாள் இன்று நடைபெறவுள்ளது.
0 Comments