அரச ஊழியர்களுக்கு விசேட முன்பணம் அறிவிப்பு!!
2025 ஆம் ஆண்டுக்கான அரச ஊழியர்களுக்கு விசேட முற்பணம் வழங்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கான தீர்மானத்தை பொதுநிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு அறிவித்துள்ளது.
அதிகாரிகளுக்கு 4000 ரூபாவிற்கு அதிகமில்லாமல் விசேட முற்பணம் வழங்கப்படும் என்று அமைச்சின் செயலாளர் எஸ். அலோக பண்டார வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த முற்பணம் 2025 ஆம் ஆண்டு ஜனவரி 1 ஆம் தேதி முதல் பெப்ரவரி 28 ஆம் தேதி வரை வழங்கப்படும். அதன்பின்பு, அதற்கு பின்னர் பணம் செலுத்தக் கூடாது என, செயலாளர்கள், மாகாண பிரதம செயலாளர்கள் மற்றும் திணைக்களத் தலைவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
_Srilanka Tamil News_
0 Comments