Ticker

10/recent/ticker-posts

கட்டுநாயக்கா மற்றும் யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையங்களில் நிகழ்வுள்ள மாற்றம்!!

 கட்டுநாயக்கா மற்றும் யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையங்களில் நிகழ்வுள்ள மாற்றம்!

இலங்கையின் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையமும் யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையமும் விரிவாக்கப் பணிகளுக்காக முன்மொழிவுகளை கோரியுள்ளன. இந்த அபிவிருத்தித் திட்டங்கள் ஜப்பான் சர்வதேச கூட்டுறவு முகவத்தின் நிதி உதவியுடன் முன்னெடுக்கப்படவுள்ளன. 


கட்டுநாயக்க விமான நிலையத்தில் புதிய முனையங்களை உருவாக்கவும், யாழ்ப்பாணம் விமான நிலையத்தை விரிவுபடுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த அபிவிருத்திகள் மூலம் விமான நிலையங்களின் சேவைகள் மேம்படுத்தப்படுவதுடன், பயணிகளுக்கு மேற்பட்ட வசதிகள் வழங்கப்படவுள்ளன. 

விமான நிலையங்களை அபிவிருத்தி செய்வது குறித்த சாத்திய ஆய்வு முன்மொழிவுகள் கோரப்பட்டுள்ளன. இலங்கை வான் பரப்பு பிராந்தியத்திற்கு போட்டியாக அமையக்கூடிய விமான நிலையங்களைக் கொண்ட இந்தியா, மாலைதீவு, இந்தோனேசியா மற்றும் அவுஸ்திரேலியா தவிர்ந்த ஏனைய நாடுகளிடமிருந்து இந்த முன்மொழிவுகள் கோரப்பட்டுள்ளன. 


கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை மேலும் விஸ்தரிக்கவும் புதிய முனையங்களை உருவாக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. இதேபோன்று யாழ்ப்பாண விமான நிலையமும் விஸ்தரிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

கட்டுநாயக்க விமான நிலையத்தின் 02ஆவது முனையத்தை மீண்டும் ஆரம்பிக்க, ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனம் (JICA) இணங்கியுள்ளதாக விமானப் போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார். 

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம், யாழ்ப்பாண நகரில் இருந்து 16 கிமீ (9.9 மைல்) வடக்கே அமைந்துள்ளது. இது பலாலி விமான நிலையம் அல்லது பலாலி விமானப் படைத்தளம் எனவும் அழைக்கப்படுகிறது. இரண்டாம் உலகப் போரின் போது உருவாக்கப்பட்ட இவ்விமான நிலையம், தற்போது யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையமாகப் பயன்பாட்டில் உள்ளது. 

இந்த அபிவிருத்திகள் மூலம் இலங்கையின் விமான போக்குவரத்து துறையில் முக்கிய முன்னேற்றங்கள் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Post a Comment

0 Comments