திருகோணமலை கடற்பரப்பில் தோன்றிய ஆளில்லா விமானம்!!
திருகோணமலை கடற்பரப்பில் வெளிநாட்டில் தயாரிக்கப்பட்டதாக சந்தேகிக்கப்படும் ஆளில்லா விமானம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கடற்றொழிலாளர் ஒருவர் இந்த விமானத்தை கண்டுபிடித்ததையடுத்து, அது கரைக்கு கொண்டு வரப்பட்டு, மேலதிக விசாரணைகளுக்காக இலங்கை விமானப்படை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது.
விமானப்படை ஊடகப் பேச்சாளர் எரந்த கிகனகே தெரிவித்ததாவது, இந்த ஆளில்லா விமானம் இலங்கை முப்படைகளின் சொத்தாக இல்லை; அது பயிற்சிகளின் போது இலக்காக பயன்படுத்தப்படும் டார்கெட் ட்ரோன் வகையைச் சேர்ந்ததாக இருக்கலாம். மேலும், இது பல ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவின் ஒடிசா மாநிலத்தில் இருந்து நாட்டிற்கு வந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.
இந்த ஆளில்லா விமானத்தில் வெடிபொருட்கள் எதுவும் இல்லை என்பதையும், அது பயிற்சிகளின் போது தவறுதலாக இலங்கை கடற்பரப்பில் வந்திருக்கலாம் என்பதையும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் தற்போது நடைபெற்று வருகின்றன.
0 Comments