Ticker

10/recent/ticker-posts

நாக சைதன்யாவின் திருமணத்திற்குப் பின் நாகர்ஜூனாவின் கருத்து!!

 நாக சைதன்யாவின் திருமணத்திற்குப் பின் நாகர்ஜூனாவின் பேச்சு!!

நடிகர் நாக சைதன்யா, நடிகை சோபிதாவை காதலித்து, சமீபத்தில் ஹைதராபாதில் உள்ள அன்னபூர்ணா ஸ்டுடியோவில் உள்ளக நிகழ்வாக நடைபெற்ற திருமணத்தில் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நெருங்கிய நண்பர்களின் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டார்.


இந்த புதிய தம்பதியைப் பற்றிய சுவாரஸ்யமான விஷயங்களை நடிகர் நாகர்ஜூனா பகிர்ந்தது ரசிகர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நாகர்ஜூனா கூறியதாவது:

 "சோபிதாவை நாக சைதன்யா காதலிக்கத் தொடங்குவதற்கு முன்பே நான் அவரை நன்றாக அறிவேன். அவரது கடின உழைப்பும் திறமையும் தான் அவரை இன்று இந்த உயரத்திற்கு கொண்டு வந்துள்ளது. அவருடைய செயல்களில் தரத்தை பிரதானமாகக் கருதும் தன்மை மிகவும் சிறப்பு. இப்படி அமைதியான, திறமையான மருமகளைப் பெற்றதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன்," என்றார்.

இந்த பேச்சு ரசிகர்களிடையே வைரலாகி, பல்வேறு கருத்துக்களையும் மனதை தட்டும் விவாதங்களையும் உருவாக்கியுள்ளது.

Post a Comment

0 Comments