Ticker

10/recent/ticker-posts

தனுஷின் உடல்நலம் குறித்து பரவிய வதந்திகள்: உண்மை என்ன?!!

தனுஷின் உடல்நலம் குறித்து பரவிய வதந்திகள்: உண்மை என்ன?!!

"நடிகர் தனுஷின் உடல்நிலை குறித்து பரவிய வதந்திகள்: நலமாக இருக்கிறார், புத்தாண்டை கொண்டாட வெளியேறி சென்றார்!"


தமிழ் சினிமாவின் பிரபல நடிகர் மற்றும் இயக்குனர் தனுஷ், கோலிவுட்டில் மட்டுமின்றி ஹாலிவுட்டிலும் பெரும் புகழ் பெற்றுள்ளார். கடந்த 2024ல் "ராயன்" படத்துடன் ரசிகர்களை கவர்ந்த அவர், அடுத்த ஆண்டு "நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்" மற்றும் "இட்லி கடை" என்ற இரண்டு படங்களை வெளியிட திட்டமிட்டுள்ளார்.

அந்தவகையில், "இட்லி கடை" படப்பிடிப்பின் போது, தனுஷ் உடல்நிலை சரியில்லாமல் போய்விட்டார். அதனால் சில நாட்கள் ஓய்வு எடுத்தார். அவர் உடல்நிலை சரியில்லை என செய்தி பரவிய நிலையில், பல வதந்திகளும் பரப்பப்பட்டன. ஆனால், தற்போது தனுஷ் நலமாக இருக்கிறார் மற்றும் அவர் பிற்பகல் வெளிநாட்டிற்கு புத்தாண்டு கொண்டாட சென்றதாக ஒரு பிரபல பத்திரிகையாளரின் அறிக்கை தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதனால், தனுஷின் உடல்நலத்தை பரவிய தவறான செய்திகளை தவிர்க்குமாறு ரசிகர்களிடமிருந்து கேட்டுக்கொள்ளப்படுகிறது.

_Srilanka Tamil News_

Post a Comment

0 Comments