இலங்கையில் மரக்கறி விலைகள் மீண்டும் உயரும்: பொதுமக்கள் அதிர்ச்சி!!
இலங்கையின் முக்கிய பொருளாதார மத்திய நிலையங்களில் கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில், இன்றைய தினம் (29-12-2024) மரக்கறிகளின் விலைகள் கணிசமாக அதிகரித்துள்ளன. தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தின் தரவுகளின்படி, ஒரு கிலோ போஞ்சியின் மொத்த விலை 350 முதல் 400 ரூபா வரை உயர்ந்துள்ளது. இதேவேளை, பச்சை மிளகாயின் விலை ஒரு கிலோவுக்கு 800 முதல் 900 ரூபா வரை அதிகரித்துள்ளது.
பூசணிக்காய்: ஒரு கிலோ 300 - 400 ரூபா (முன்பு 160 ரூபா)
தக்காளி, கரட், வெண்டைக்காய்: 500 - 800 ரூபாய்
இந்த விலை அதிகரிப்பு மலையக மற்றும் தாழ்நிலப் பகுதிகளிலிருந்து கிடைக்கும் மரக்கறிகளின் தட்டுப்பாட்டினால் ஏற்பட்டதாக விற்பனையாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
உள்ளூர் சந்தையில் மரக்கறிகளின் விலை மீளக் குறைய உறுதியாக எவ்வித நடவடிக்கையும் இல்லை என்பதால், பொதுமக்கள் பரபரப்புடன் ஆவேசம் தெரிவித்துள்ளனர்.
0 Comments