பயன்படுத்தப்பட்ட தேங்காய் எண்ணெயை சுத்திகரித்து விற்பனை: மோசடி தொடர்பில் புகார்கள் உயர்வு!!
பயன்படுத்தப்பட்ட தேங்காய் எண்ணெயை சுத்திகரித்து மீண்டும் சந்தையில் விற்பனை செய்யும் மோசடிகள் தொடர்பான புகார்கள் பெருகி வருவதாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் (PHI) தெரிவித்துள்ளது.
மசாலா பொருட்கள் மற்றும் மா தயாரிப்புகளுடன் தரமற்ற பொருட்கள் கலக்கப்படும் விவகாரம் தொடர்பிலும் தகவல்கள் கிடைத்துள்ளன.
சங்கத்தின் பிரதம செயலாளர் சமீர முத்துகுட இதை உறுதிப்படுத்தியுள்ளார்.
நாடளாவிய ரீதியில் வர்த்தக நிலையங்களில் சோதனை நடவடிக்கைகள் கடந்த முதலாம் திகதியில் இருந்து தொடங்கப்பட்டுள்ளது.
டிசம்பர் 28 வரை, 5,000-க்கும் மேற்பட்ட வர்த்தக நிலையங்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டன.
தரமற்ற உணவுப் பொருட்களை விற்பனை செய்த 450 வர்த்தக நிலையங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொதுமக்களுக்கு வேண்டுகோள்:
பண்டிகை காலங்களில் உணவுப் பொருட்களை வாங்கும்போது அவற்றின் தரத்தைக் கவனிக்கவும், சந்தேகத்திற்கிடமான பொருட்களை அதிகாரிகளிடம் அறிவிக்கவும் பொது சுகாதார பரிசோதகர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
0 Comments