Ticker

10/recent/ticker-posts

தென்கொரியாவில் விமான விபத்து: பறவை மோதலே காரணமா?!!

 தென்கொரியாவில் விமான விபத்து: பறவை மோதலே காரணமா?!!

தென்கொரியாவில் நிகழ்ந்த விமான விபத்துக்குப் பறவை மோதலே (Bird Strike) முக்கிய காரணமாக இருக்கக்கூடும் என தீயணைப்பு அதிகாரிகள் மற்றும் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.


விபத்துக்குள்ளான விமானத்தில் பயணித்த ஒருவர் தனது உறவினருக்கு அனுப்பிய குறுந்தகவலில், விமானத்தின் இறக்கையில் பறவையொன்று சிக்கியதாகவும், இதனால் விமானம் தரையிறங்க முடியாமல் இருக்கிறது எனவும் குறிப்பிட்டிருந்தார்.

பறவை மோதல்: விமானத்துறையில் அடிக்கடி காணப்படும் சிக்கல்
பறவை தாக்குதல் விமானங்களில் பொதுவாக நிகழக்கூடியதொரு பிரச்சினையாகும்.

2022ஆம் ஆண்டு, பிரித்தானியாவில் மட்டும் 1,400-க்கும் மேற்பட்ட பறவை தாக்குதல்கள் பதிவாகின. இவற்றில் 100-க்கு மேற்பட்ட தாக்குதல்கள் விமானங்களுக்கு சிறிய சேதங்களை ஏற்படுத்தின.

2009ஆம் ஆண்டு, ஏர்பஸ் விமானம் நியூயார்க்கில் ஹட்சன் ஆற்றில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. வாத்துக்களின் கூட்டத்துடன் மோதியதால் இவ்விபத்து ஏற்பட்டது. ஆனால், விமானத்தில் இருந்த 159 பயணிகளும் உயிர் தப்பினர்.


இந்நிலையில், சீரற்ற காலநிலை உள்ளிட்ட பிற காரணங்களாலும் தென்கொரியாவில் நிகழ்ந்த விபத்து ஏற்பட்டிருக்க வாய்ப்புள்ளதாக நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

விபத்து தொடர்பான விரிவான விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

_Srilanka Tamil News_

Post a Comment

0 Comments