வரலாற்று சாதனை: 1.5 ட்ரில்லியன் ரூபாவுக்கு மேல் வருமானம் ஈட்டிய இலங்கை சுங்கத்துறை!!!
இலங்கை சுங்கத் திணைக்களம் கடந்த ஆண்டில் வரலாற்று சிறப்புமிக்க சாதனையை பதிவு செய்துள்ளது. 2024 ஆம் ஆண்டின் முடிவில், திணைக்களம் 1.515 இலட்சம் கோடி ரூபா வருமானத்தை ஈட்டியுள்ளது. இது, ஒரு வருடத்தில் சுங்கத்துறை பெற்ற அதிகூடிய வருமானமாகும்.
இலங்கை சுங்கத் திணைக்களத்தின் ஊடகப் பேச்சாளர் மற்றும் மேலதிக சுங்கப் பணிப்பாளர் நாயகமுமான சீவலி அருக்கொட இதனை அறிவித்தார்.
அதேவேளை, 2024 ஆம் ஆண்டுக்கான அரசாங்கத்தின் வருமான இலக்கு 1.533 இலட்சம் கோடி ரூபா என நிர்ணயிக்கப்பட்ட நிலையில், சுங்கத் திணைக்களம் இந்த இலக்கை அடைந்துள்ளது.
இலக்கு அடைவதற்கான காரணிகள்
இது குறித்து சுங்கத் திணைக்களம் மேலும் தெரிவிக்கையில்,
அரசாங்கத்தின் நவீன வரிக் கொள்கைகள்,
இறக்குமதி அளவின் பெருக்கம்,
சுங்க நிர்வாகத்தின் மேம்படுத்தப்பட்ட முறைகள் ஆகியவை இந்த சாதனையில் முக்கிய பங்கை வகித்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இலங்கை சுங்கத்தின் இந்த வரலாற்று சாதனை, நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு வலிமையாக அமையும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
_Srilanka Tamil News_
0 Comments