Ticker

10/recent/ticker-posts

இன்றைய ராசி பலன் (19.01.2025)

 இன்றைய ராசி பலன் (19.01.2025)

மேஷம்:

இன்று வெளியே செல்லும் பொழுது மிக கவனமாக செல்ல வேண்டும். அடுத்தவர்கள் ஆலோசனை கேட்டு நடப்பதை தவிர்க்கலாம். எதையும் ஒரு முறைக்கு பலமுறை யோசித்து செய்தால் வெற்றி கிடைக்கும்.

ரிஷபம்:

தொழில் ரீதியாக வெளியூர் பயணம் செல்ல நேரிடலாம். குடும்பத்தில் சந்தோசம் உண்டாகும். பிறருக்கு கடன் கொடுப்பதை தவிர்க்க வேண்டும். பணவரவில் சில சிக்கல் உண்டாகலாம்.

மிதுனம்:

இன்று வேலை பளு அதிகமாக இருக்கும். பெற்றோர்கள் நலனில் அக்கறை செலுத்த வேண்டும். உறவினர்கள் வருகையால் நன்மை உண்டாகும். உயர் அதிகாரிகளிடம் கவனமாக இருக்க வேண்டும்.

கடகம்:

எதிர்பார்த்த தகவல் வரும். தடைபட்ட வேலைகள் நடந்தேறும். வரவை வைத்து கடன்களை அடைப்பீர். நம்பிக்கையுடன் மேற்கொண்ட முயற்சி லாபம் தரும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.

சிம்மம்:

பிறரை நம்பி குடும்ப விஷயங்களை பகிர்ந்து கொள்ள வேண்டாம். எதையும் தீர விசாரித்து செயல்படுவது நன்மை தரும். கணவன் மனைவி இடையே கருத்து வேறுபாடுகள் உண்டாகலாம்.

கன்னி:

உங்கள் புத்திசாலித்தனம் வெளிப்படும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபத்தை அடைவீர். செயல்களில் சங்கடம் உண்டாகும். உங்கள் முயற்சிகளில் சில நெருக்கடிகள் தோன்றும்.

துலாம்:

பழைய பிரச்சனை ஒன்று முடிவிற்கு வரும். உடன் பிறந்தவர்கள் பற்றி புரிந்து கொள்வீர்கள். வேலையில் உங்களுக்கான பாராட்டுக்கள் கிடைக்கும். பெற்றோர்கள் ஆலோசனை கேட்டு நடப்பது நன்மை தரும்.

விருச்சிகம்:

வியாபாரத்தில் இருந்த சங்கடம் நீங்கும். பணியாளர் ஒத்துழைப்பு அதிகரிக்கும். பொருளாதார நெருக்கடி விலகும். முயற்சியில் வெற்றி பெறுவீர்கள். வரவேண்டிய பணம் வரும். குடும்பத்தினர் தேவைகளை பூர்த்தி செய்வீர்.

தனுசு:

மூன்றாம் நபரால் குடும்பத்தில் சில குழப்பங்கள் தோன்றலாம். பிள்ளைகள் நலனில் அக்கறை செலுத்த வேண்டும். எதிர்காலம் பற்றிய சிந்தனை மன கவலைகள் கொடுக்கும்.

மகரம்:

பெரியோரை சந்தித்து உதவிகள் பெறுவீர். சிலர் வழிபாட்டில் பங்கேற்பீர். குழப்பங்கள் விலகும். வெளியூர் பயணம் ஆதாயம் தரும். உங்கள் முயற்சிக்கு தந்தைவழி உறவுகள் ஆதரவு கிடைக்கும்.

கும்பம்:

எதிர்பார்த்த பணம் கிடைப்பதில் தாமதம் உண்டாகும். எந்த ஒன்றிலும் இன்று அவசரம் வேண்டாம். இயந்திரப் பணியில் எச்சரிக்கையுடன் செயல்படுவது அவசியம். வாக்கு வாதங்களைத் தவிருங்கள்.

மீனம்:

இன்று பிள்ளைகள் குணம் தெரிந்து நடந்து கொள்வீர்கள். ஒரு சிலருக்கு வெளிநாடு செல்லும் வாய்ப்புகள் தேடி வரும். துணிச்சலாக செயல் பட்டு காரியம் முடிப்பீர்கள். இறை வழிபாடு நன்மை அளிக்கும்.

_Srilanka Tamil News_


Post a Comment

0 Comments