மூன்று பேருந்துகள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து : 20 இற்கும் மேற்பட்டோர் வைத்தியசாலையில்!!
காலி, இமதுவ, அங்குலுகஹா சந்தியில் இன்று (26.01.2025) காலை 8.30 மணியளவில் மூன்று பேருந்துகள் மோதி ஏற்பட்ட விபத்தில் 29 பேர் காயமடைந்துள்ளனர்.
விசாரணைகளின் படி, நிறுத்தப்பட்டிருந்த பேருந்தொன்றில் வேகமாக வந்த பேருந்து மோதியதுடன், அதன் பின்னால் வந்த மற்றொரு பேருந்தும் மோதியதால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. விபத்தில் காயமடைந்தவர்களில் 23 பேர் இமதுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், 6 பேர் கராபிட்டிய மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பப்பட்டுள்ளனர்.
இந்த விபத்தில் இரண்டு தனியார் பயணிகள் பேருந்துகள் மற்றும் அலுவலக ஊழியர்களை ஏற்றிச் சென்ற பேருந்து பாதிக்கப்பட்டுள்ளன.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
_Srilanka Tamil News_
0 Comments