Ticker

10/recent/ticker-posts

2025 உலக கிண்ண கபடியில் இலங்கையை வென்ற இந்திய ஆண்கள் அணி!!

 2025 உலகக் கிண்ண கபடி: இந்திய ஆண்கள் அணியும் மகளிர் அணியும் அரையிறுதிக்கு முன்னேறினர்!!

புதுடில்லி: 2025 உலகக் கிண்ண கபடி போட்டியில் இந்திய ஆண்கள் அணி, இலங்கை அணியை 100-40 என்ற கணக்கில் வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது. இந்த ஆட்டத்தில் இலங்கை அணியினர் கடுமையான சவாலை அளித்திருந்தாலும், இந்திய அணி தன்னுடைய வெற்றியை உறுதிப்படுத்தி அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது.

அதேவேளை, இந்திய மகளிர் அணி பங்களாதேஷை 109-16 என்ற கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது.

இன்று நடைபெறும் அரையிறுதியில், இந்திய ஆண்கள் அணி தென்னாபிரிக்க அணியுடன் மோதுகிறது, மேலும் இரண்டாவது அரையிறுதியில் ஈரான் மற்றும் நேபாள அணிகள் மோதுகின்றன.

இந்த போட்டிகள் நவம்பர் 17 முதல் 23 வரை புதுடில்லியில் உள்ள இந்திரா காந்தி உள்ளக மைதானத்தில் நடைபெற்று வருகிறது, இதில் உலகம் முழுவதும் இருந்து 16 நாடுகள் பங்கேற்கின்றன.

Srilanka Tamil News



Post a Comment

0 Comments