2025 ஆம் ஆண்டின் முதல் நாடாளுமன்ற அமர்வு ஆரம்பம்!!
2025 ஆம் ஆண்டின் முதல் நாடாளுமன்ற அமர்வு ஜனவரி 7ஆம் தேதி செவ்வாய்க்கிழமையன்று காலை 9.30 மணிக்கு தொடங்கும் என நாடாளுமன்ற பொதுச் செயலாளர் குஷானி ரோஹணதீர அறிவித்துள்ளார்.
அமர்வு அட்டவணை
ஜனவரி 7 (செவ்வாய்)
- காலை 9.30 – 10.30: வாய்மொழி பதிலுக்கான கேள்வி நேரம்.
- காலை 10.30 – மாலை 5.30: 2024 ஆம் ஆண்டு மத்திய நிதி நிலை அறிக்கையை மையமாகக் கொண்ட ஒத்திவைப்பு விவாதம்.
ஜனவரி 8 (புதன்)
- காலை 9.30 – 10.00: பிரதமரிடம் கேட்கப்படும் கேள்விகளுக்கான நேரம்.
- காலை 10.00 – 10.30: வாய்மொழி பதிலுக்கான கேள்வி நேரம்.
- காலை 10.30 – மாலை 5.00:
முக்கிய சட்ட மசோடாக்கள் மற்றும் விதிமுறைகள், உள்பட:- இறக்குமதி ஏற்றுமதி கட்டுப்பாட்டு சட்டம்
- அந்நிய செலாவணி சட்டம்
- கேசினோ வணிக ஒழுங்குமுறை சட்டம்
- துறைமுகம் மற்றும் விமான நிலைய மேம்பாட்டு வரி சட்டம்.
- மாலை 5.30: எதிர்க்கட்சிகளின் பிரேரணையின் அடிப்படையில் சபை ஒத்திவைப்பு விவாதம்.
ஜனவரி 9 (வியாழன்)
- காலை 9.30 – 10.30: வாய்மொழி பதிலுக்கான கேள்வி நேரம்.
- காலை 10.30 – 11.30:
- இலங்கை ஏற்றுமதி மேம்பாட்டு சட்டம்
- சிறப்பு சரக்கு வரி சட்டம்
- நலன்புரி சலுகைகள் சட்டம் தொடர்பான விவாதம்.
ஜனவரி 10 (வெள்ளி)
- முழு நாள் (காலை 9.30 – மாலை 5.30):
- மறைந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குமார வெல்கம, எச். நந்தசேன, மற்றும் டியூடர் குணசேகர ஆகியோருக்கு அனுதாபப் பிரேரணைகள்.
இந்த நாடாளுமன்ற அமர்வு அரசியல் மற்றும் சட்டரீதியாக முக்கியமான முடிவுகளை எடுக்கும் களமாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
0 Comments