Ticker

10/recent/ticker-posts

வவுனியாவில் அரச காணி மோசடி: போலி ஆவணங்கள் மூலம் 22 மில்லியன் ரூபாய்க்கு விற்பனை – அரச உத்தியோகத்தர் கைது!!

 வவுனியாவில் அரச காணி மோசடி: போலி ஆவணங்கள் மூலம் 22 மில்லியன் ரூபாய்க்கு விற்பனை – அரச உத்தியோகத்தர் கைது!!

வவுனியாவில், பம்பைமடு பகுதியில் உள்ள ஒரு அரச காணியை போலி ஆவணங்களை தயாரித்து 22 மில்லியன் ரூபாய்க்கு விற்பனை செய்த குற்றச்சாட்டில் வவுனியா மாவட்ட செயலகத்தில் பணியாற்றும் ஒரு அரச உத்தியோகத்தர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கொழும்பு குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில், கடந்த சில வருடங்களுக்கு முன்னர் இந்த மோசடி நடந்தது என்பது தெரியவந்துள்ளது.

இந்த குற்றச்சாட்டில் சம்பந்தப்பட்ட வவுனியா மாவட்ட செயலக உத்தியோகத்தரை கைது செய்ததாக பொலிசார் தெரிவித்துள்ளார். மேலதிக விசாரணைகள் நடந்து கொண்டு, குறித்த உத்தியோகத்தரை நீதிமன்றத்தில் முற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் குறித்து பொலிசார் மேலும் விசாரணைகளை தொடர்வதாக தெரிவித்துள்ளனர்.

Srilanka Tamil News


Post a Comment

0 Comments