Ticker

10/recent/ticker-posts

மாத்தறை – தங்காலை வீதியில் பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து: 35க்கும் மேற்பட்டோர் காயம்!!

 மாத்தறை – தங்காலை வீதியில் பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து: 35க்கும் மேற்பட்டோர் காயம்!!

மாத்தறை – தங்காலை பிரதான வீதியில் கந்தர, தலல்ல பகுதியில் இன்று காலை ஏற்பட்ட கோர விபத்தில் 35க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.




எம்பிலிப்பிட்டியவிலிருந்து மாத்தறைக்கும், மாத்தறையிலிருந்து தங்காலைக்கும் பயணித்த இரண்டு பேருந்துகளும் நேருக்கு நேர் மோதி இந்த விபத்து ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

காயமடைந்தவர்களின் விபரங்கள்:

29 பேர் கந்தர மருத்துவமனையில் அனுமதி

6 பேர் மாத்தறை மருத்துவமனையில் அனுமதி

காயமடைந்தவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு மருத்துவ உதவிகள் வழங்கப்பட்டுள்ளன. அவர்களில் சிலரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகள் தற்போது பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பொதுமக்கள் சாலையில் பாதுகாப்புடன் பயணிக்க வேண்டும் என அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

Srilanka Tamil News


Post a Comment

0 Comments