Ticker

10/recent/ticker-posts

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை: இறுதி முடிவு வெளியீடு!!

 தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை: இறுதி முடிவு வெளியீடு!!

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் கசிந்த மூன்று கேள்விகளுக்கான இலவச புள்ளிகள் அனைத்து மாணவர்களுக்கும் வழங்கப்படும் என பரீட்சைகள் திணைக்களம் இன்று (ஜனவரி 1) அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

உச்ச நீதிமன்ற உத்தரவின்படி, இந்த முடிவு எடுக்கப்பட்டதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எச். ஜே. எம். சி. அமித் ஜயசுந்தர தெரிவித்தார். கடந்த செப்டெம்பர் 15 அன்று நடைபெற்ற பரீட்சையின் முதல் வினாத்தாளில் உள்ள மூன்று கேள்விகள் கசிந்ததாக கூறி எழுந்த சர்ச்சைக்கு தீர்வாக, இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

உச்ச நீதிமன்றம் வழங்கிய மூன்று பரிந்துரைகளில்,

1. சர்ச்சைக்குரிய கேள்விகளை நீக்கி மதிப்பீடு செய்தல்,

2. மூன்று கேள்விகளுக்கு இலவச புள்ளிகள் வழங்கல்.

3. பரீட்சையை மீண்டும் நடத்துதல்,

இதனுள் இரண்டாவது பரிந்துரையான முழுமையான இலவச புள்ளிகள் வழங்கல் தீர்மானமாக எடுக்கப்பட்டுள்ளது.

இச்செயல்முறையின் மூலம் பரீட்சையின் நேர்மை, சமநிலை மற்றும் நம்பகத்தன்மை உறுதி செய்யப்படுவதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. மேலும், மதிப்பீட்டு பணிகள் விரைவாக முடிக்கப்பட்டு, பெறுபேறுகள் சீராக வெளியிடப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

_Srilanka Tamil News_


Post a Comment

0 Comments