அம்பாறையில் 9 வயது சிறுமி மீது அத்துமீறல்: 69 வயது நபர் கைது!!
அம்பாறை மாவட்டத்தின் வீரமுனை பகுதியில் 9 வயது சிறுமியை அத்துமீறல் செயற்பாட்டுக்கு உள்ளாக்கியதாகக் குற்றச்சாட்டில், 69 வயது நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
சிறுமியின் தாயார் அளித்த முறைப்பாட்டின் அடிப்படையில், சம்பவத்தில் தொடர்புடைய சந்தேக நபர், அதிர்ஷ்ட இலாப சீட்டு (லொத்தர் டிக்கெட்) விற்பனை செய்து வருபவர் எனவும், வீரமுனை பகுதியில் வாடகை வீட்டில் தங்கி வசித்து வந்தவர் எனவும் தெரியவந்துள்ளது.
குற்றச்சாட்டு தொடர்பான விசாரணைகளின் பேரில், பாதிக்கப்பட்ட சிறுமி சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையில் மருத்துவ பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மேலும், இச்சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை சம்மாந்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
_Srilanka Tamil News_
0 Comments