புயல் காலநிலையால் பிரித்தானியாவில் புத்தாண்டு கொண்டாட்டங்கள் ரத்து!!!
பிரித்தானியாவில் பல பகுதிகளில் புத்தாண்டு கொண்டாட்டங்கள் புயல் காலநிலையின் காரணமாக இரத்து செய்யப்பட்டுள்ளது.
புதுவிதமான வானிலைச் சவால்கள் காரணமாக, சில பகுதிகளில் ஏற்பாடுகள் மாற்றப்பட்டுள்ளன. பட்டாசு வெடித்தல் மற்றும் பிற நிகழ்வுகள் பாதுகாப்பை கருத்தில் கொண்டு நிறுத்தப்பட்டுள்ளன.
குறிப்பாக, பிளாக்பூல் (Blackpool), நியூகேஸில் (Newcastle), ஐல் ஆஃப் வைட் (Isle of Wight), மற்றும் ரிப்பன் (Ripon) போன்ற இடங்களில் காற்றின் வேகம் மற்றும் மழையால் பாதிக்கப்படும் என்பதால் நிகழ்ச்சிகள் இரத்து செய்யப்பட்டுள்ளன.
எடின்பர்க்கின் (Edinburgh) புகழ்பெற்ற ஹோக்மனே (Hogmanay) திருவிழா பாதுகாப்பு காரணங்களால் ஏற்கனவே ரத்து செய்யப்பட்டது.
சஃபோல்க் மாகாணத்தின் லோஸ்டோஃப்டில் (Lowestoft) நடந்த இரு பட்டாசு நிகழ்ச்சிகள் சனிக்கிழமைக்கு மாற்றப்பட்டுள்ளன.
இந்நிலையில், வானிலை ஆய்வு மையம் பல்வேறு பகுதிகளில் தொடர்ச்சியான எச்சரிக்கைகளை விடுத்துள்ளது. பங்கேற்பாளர்கள் மற்றும் நிகழ்ச்சி பணியாளர்களின் பாதுகாப்பை முன்னிட்டு முன்னெச்சரிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
_Srilanka Tamil News_
0 Comments