Ticker

10/recent/ticker-posts

கொழும்பில் சடலமாக மீட்கப்பட்ட தமிழ் மாணவன்!!

கொழும்பில் சடலமாக மீட்கப்பட்ட தமிழ் மாணவன்!!

கொழும்பு மாவட்டம், கெஸ்பவை பிரதேசத்தில் வசிக்கும் 18 வயது தமிழ் மாணவன் ஒருவர், தனது வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் நேற்று (21.01.2024) மீட்கப்பட்டார்.

உயர்தர கணிதப் பிரிவில் கல்வி கற்றிருந்த மாணவனின் திடீர் மரணம் சமூகத்தைத் அதிர்ச்சியிலாழ்த்தியுள்ளது. ஆரம்பகட்ட விசாரணைகளில், குடும்பத்தினருடனான முரண்பாடுகள் இந்த துயரச் சம்பவத்திற்கு காரணமாக இருந்திருக்கலாம் என பொலிஸார் கூறுகின்றனர்.

மாணவனின் சடலம் உடற்கூற்றுப் பரிசோதனைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டுள்ளது. பரிசோதனையின் முடிவுகள் இந்த மரணத்தின் சாத்தியமான காரணங்களை மேலும் தெளிவுபடுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தச் சம்பவம் மாணவர்களின் உளநிலையில் கவனம் செலுத்த வேண்டும் என்ற முக்கியத்துவத்தை மீண்டும் நினைவூட்டுகிறது. மன அழுத்தத்திற்கான மனநல ஆதரவும் வழிகாட்டலும் வழங்கப்பட வேண்டும் என்பதற்கான தேவை இதனால் உரையாடலுக்கு வரவேண்டியுள்ளது.

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.

Srilanka Tamil News


Post a Comment

0 Comments