இலங்கையர்கள் ரஷ்ய இராணுவத்தில் இணைக்கப்பட்டதை எதிர்த்து கொழும்பில் போராட்டம்!!
கொழும்பு, ஜனவரி 6, 2025 – இலங்கையின் சிங்கள மற்றும் தமிழ் இளைஞர்கள் 500 பேர் ரஷ்ய இராணுவத்தில் இணைக்கப்பட்டுள்ளதாக வெளியாகிய தகவல்களின் பேரில், இன்று கொழும்பில் அமைந்துள்ள வெளிவிவகார அமைச்சகத்திற்கு முன்பாக போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
இந்த போராட்டத்தில், இராணுவத்தில் இணைக்கப்பட்ட இளைஞர்களின் தாய்மார்கள் மற்றும் உறவினர்கள் கலந்து கொண்டு தங்கள் எதிர்ப்புகளை வெளியிட்டனர். போராட்டத்தின் போது, ஒரு தாயார் அவரது மகனை வெளிநாட்டில் வேலைவாய்ப்பிற்காக பெல்ஜியத்திற்கு அனுப்புவதாக கூறிய தனது சகோதரன், அவர்களை ஏமாற்றி ரஷ்யாவிற்கு அனுப்பியதாக குற்றம்சாட்டினார். மேலும், ரஷ்யாவிற்கு சென்ற உடன், அவரது மகனுக்கு இராணுவ பயிற்சி வழங்கப்பட்டு பின்னர் இராணுவத்தில் சேர்க்கப்பட்டதாக அவர் தெரிவித்தார்.
"எங்கள் மக்களை மீண்டும் நாட்டிற்கு அழைத்து வர அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று போராட்டத்தில் கலந்து கொண்டோர் கோரிக்கை விடுத்தனர்.
இது தொடர்பாக, ரஷ்ய தூதரகம் இதுவரை எந்த உத்தியோகபூர்வ விளக்கமும் அளிக்காத நிலையில், இலங்கை அரசாங்கத்தின் பதில் நடவடிக்கைகளுக்காக மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
_Srilanka Tamil News_
0 Comments