Ticker

10/recent/ticker-posts

தெஹிவளை-கல்கிசை பகுதியில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் காயம், ஒருவர் கைது!!

 தெஹிவளை-கல்கிசை பகுதியில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் காயம், ஒருவர் கைது!!

தெஹிவளை-கல்கிசை பகுதியில் இன்று (ஜனவரி 19) காலை துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

பொலிஸ் தகவலின்படி, மோட்டார் சைக்கிளில் வந்த இருவர், மற்றொரு நபர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் காயமடைந்த நபர் உடனடியாக களுபோவில மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவத்திற்கான காரணம் இதுவரை வெளிப்படையாகத் தெரியவில்லை. எனினும், சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் ஒருவரை பொலிஸார் கைத்துப்பாக்கியுடன் கைது செய்துள்ளனர். மற்றொரு நபரைத் தேடும் நடவடிக்கைகள் தொடர்கின்றன.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Srilanka Tamil News

Post a Comment

0 Comments