கோட்டாபய ராஜபக்ச சிஐடியின் முன் விசாரணைக்காக முன்னிலையாகியுள்ளார்!!
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச சற்று முன் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு முன்னிலையாகியுள்ளார். எமது செய்தியாளரின் தகவலின்படி, அவர் திணைக்களத்திற்குள் பின்பக்க வீதியினால் சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கதிர்காமம் பகுதியில் நடந்த காணி மோசடி சம்பவம் தொடர்பாக அவர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் விசாரணைக்காக அழைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக வாக்குமூலம் பெறப்படுவதாக கூறப்படுகின்றது.
மேலும், முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்காரவுக்கும் இன்று சிஐடியில் முன்னிலையாகுமாறு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது. அவர்களுடைய வாக்குமூலம் எடுக்கப்படுமென எதிர்பார்க்கப்படுகிறது.
Srilanka Tamil News
0 Comments