Ticker

10/recent/ticker-posts

மது போதையில் பாதசாரி கடவையில் வயோதிப பெண்ணை மோதி தாக்கிய பொலிஸார்!!

மது போதையில் பாதசாரி கடவையில் வயோதிப பெண்ணை மோதி தாக்கிய பொலிஸார்!!

கிளிநொச்சி ஏ9 பிரதான வீதியில் உள்ள உணவகமொன்றின் அருகே பாதசாரி கடவையில் சாலையை கடக்க முயன்ற வயோதிப பெண்ணை, மோட்டார் சைக்கிளில் பயணித்த இரண்டு பொலிஸார் மோதியுள்ளனர்.

இந்த விபத்தில், வயோதிபப் பெண் தலையில் கடுமையான காயமடைந்த நிலையில், உடனடியாக கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவத்தை அவதானித்த பொதுமக்கள், மோட்டார் சைக்கிளில் இருந்த பொலிஸார் இருவரும் அதிக மது போதையில் காணப்பட்டதாகவும், அவர்களுடன் மதுபான பாட்டில்களும் இருந்ததாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

விபத்து தொடர்பாக பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்தச் சம்பவம் தொடர்பாக பொதுமக்கள் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளதுடன், சம்பவத்துக்கு காரணமானவர்களுக்கு உரிய தண்டனைகள் வழங்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.

Srilanka Tamil News

Post a Comment

0 Comments