ஜனாதிபதி ஊடகப் பிரிவிலிருந்து காணாமல் போன பொருட்கள்!!
கொழும்பு: ஜனாதிபதி ஊடகப் பிரிவிலிருந்து காணாமல் போன சில பொருட்கள் தொடர்பாக குற்றப்புலனாய்வுத் துறை (சி.ஐ.டி.) தொடங்கிய விசாரணைகளின் முன்னேற்றம், எதிர்காலத்தில் கொழும்பு கோட்டை நீதிமன்றத்திற்கு அறிவிக்கப்பட வேண்டும் என்று நீதவான் நிலபுலி லங்காதிலக உத்தரவிட்டுள்ளார்.
இப்பிரச்னை குறித்து கொள்முதல் அதிகாரியிடம் வாக்குமூலம் பெற்றுள்ளதும், பொருட்களைப் பெற்றவர்களிடமிருந்து வாக்குமூலம் பெறவுள்ளதாகவும் சி.ஐ.டி. தெரிவித்துள்ளது.
இந்த விசாரணை தொடர்பாக, மாயமான பொருட்களை கண்டறியவும், நபர்களிடமிருந்து சம்பந்தப்பட்ட தகவல்களை பெற்று சட்டப்படி நடவடிக்கைகள் எடுக்கவும் விசாரணைகள் தொடர்ந்து நடைபெறும்.
_Srilanka Tamil News_
0 Comments