Ticker

10/recent/ticker-posts

பிரித்தானியாவில் போலியான கடவுச்சீட்டுகள்: சமூக ஊடகங்களில் விளம்பரங்கள் நீக்கம்!!

பிரித்தானியாவில் போலியான கடவுச்சீட்டுகள்: சமூக ஊடகங்களில் விளம்பரங்கள் நீக்கம்!!

சட்டவிரோத குடியேற்றம் மற்றும் ஆவண மோசடி நடவடிக்கைகள் மீது பிரித்தானியாவின் தேசிய குற்றப்புலனாய்வு அமைப்பு (NCA) கடுமையான நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. சமீபத்தில், பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் போன்ற சமூக ஊடக பக்கங்களில் வெளியிடப்பட்ட போலியான பிரித்தானிய கடவுச்சீட்டுகள் மற்றும் வாகன சாரதி உரிமங்கள் தொடர்பான விளம்பரங்களை நீக்கினார்கள்.

NCA அதிகாரிகள் தெரிவித்ததின்படி, இந்நிறுவனம் 5,000 பவுண்டுகள் கட்டணமாக பயண ஆவணங்கள் வழங்கி, சட்டவிரோதமாக வேலைவாய்ப்புகளை ஏற்படுத்த உதவியது. இந்த மோசடி நடவடிக்கைகள், படகில் அல்லது விமானத்தில் பிரித்தானியாவுக்கு வருபவர்களை இலக்கு வைத்து நடத்தப்படுகின்றன.

மேலும், அல்பேனிய குடியிருப்புகளுக்கான வாடகைகள் மற்றும் சாதாரண வேலைவாய்ப்புகளுக்கு 6,000 பவுண்டுகள் வசூலிக்கப்பட்டது. இந்த மோசடி நடவடிக்கைகளை முன்னெடுக்கும் குழுவினரே போலியான ஆவணங்களை அல்பேனியர்களுக்கு வழங்குகின்றனர்.

இத்தகைய சட்டவிரோத செயல்களுக்கு எதிராக, பிரித்தானிய அரசு கடுமையான நடவடிக்கைகள் எடுப்பதாக அறிவித்துள்ளது.

_Srilanka Tamil News_


Post a Comment

0 Comments