யாழில் பாடசாலை மாணவியை சீரழித்த ஆசிரியர் அதிரடியாக கைது!!
யாழ்ப்பாணம் கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாடசாலை ஒன்றில் 14 வயதான மாணவியை துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கியதாகக் குற்றச்சாட்டுடன் 52 வயதான ஆசிரியர் ஒருவர் நேற்று (22) கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பாக கோப்பாய் பொலிஸாருக்கு கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில், குறித்த ஆசிரியரை கைது செய்த பொலிஸார், மாணவியை உடனடியாக மருத்துவ பரிசோதனைக்காக வைத்தியசாலையில் அனுமதித்தனர்.
இதையடுத்து, சந்தேக நபரிடம் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு, அவரை யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்தச் சம்பவம் சமூகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதுடன், பள்ளி வளாகங்களில் மாணவர்களின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வை உறுதிப்படுத்துவதற்கான அவசியத்தை மீண்டும் வலியுறுத்துகிறது.
_Srilanka Tamil News_
0 Comments