குருணாகலில் மனைவியை கொடூரமாக கொலை செய்த கணவன் - சந்தேக நபர் தப்பியோட்டம்!!
குருணாகல், குளியாப்பிட்டி பிரதேசத்தில் குடும்ப தகராறு காரணமாக கணவரால் மனைவி கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் ஒன்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பரகஹருப்ப பிரதேசத்தில் 37 வயதான பெண் ஒருவரை நேற்று (31) மண்வெட்டியால் தாக்கி கொலை செய்துள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
கொலையின் பின்னர், சந்தேக நபர் பிரதேசத்தை விட்டு தப்பிச் சென்றுள்ளதாகவும், அவரை கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகள் குளியாப்பிட்டி பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.
இந்த கொலை சம்பவம் சமூகத்தில் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
_Srilanka Tamil News_
0 Comments