யாழ்ப்பாணத்தில் மின்வாசிப்பாளர் போல கொள்ளை!!
யாழ்ப்பாணம் திருநெல்வேலி அரசடி வீதி பகுதியில் நேற்று (28) காலை ஒரு கொள்ளைச் சம்பவம் பதிவாகியுள்ளது.
காலை 10 மணியளவில், இனந்தெரியாத நபர் ஒருவர் மின்வாசிப்பாளர் போலவும், முகவரி விசாரிப்பது போன்று நடித்து, சில வீடுகளுக்கு சென்றுள்ளார். பின்னர், தனியாக வீட்டில் இருந்த பெண் ஒருவரின் வீட்டிற்குள் நுழைந்து, அவரது ஒன்றரைப் பவுண் தங்கச் சங்கிலியை அறுத்து தப்பியோடியுள்ளார்.
இச்சம்பவம் தொடர்பாக கோப்பாய் பொலிஸாரிடம் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
பொதுமக்கள் அவதானமாக இருக்க வேண்டும்!
இனந்தெரியாத நபர்களை வீட்டிற்குள் அனுமதிப்பதற்கு முன்பு அடையாளத்தை சரிபார்க்கவும்.
சந்தேகமான நபர்கள் குறித்து உடனடியாக பொலிஸாருக்கு தகவல் வழங்கவும்.
வீடுகளில் CCTV கேமராக்கள் பொருத்தி பாதுகாப்பு நடவடிக்கைகளை உறுதிப்படுத்தவும்.
வீட்டில் இருப்பவர்கள், அண்டை வீட்டாருடன் தொடர்பு வைத்திருக்க கூடுதல் பாதுகாப்பாக இருக்கும்.
_Srilanka Tamil News_
0 Comments