கட்டுநாயக்க விமான நிலையத்தில் தங்க நகைகளுடன் நபர் கைது!!
கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் (BIA) சட்டவிரோதமாக தங்க நகைகள் கொண்டு வர முயன்ற ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்நிகழ்வு கடந்த ஜனவரி 4ஆம் தேதி இரவு இடம்பெற்றுள்ளது. அபுதாபியில் இருந்து இலங்கைக்கு வந்த 25 வயதுடைய, வெலம்பொட பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவரிடமிருந்து இந்த தங்க நகைகள் கைப்பற்றப்பட்டன.
புலனாய்வு அதிகாரிகளுக்கு முன்கூட்டியே கிடைத்த தகவலின் அடிப்படையில், சந்தேக நபரிடம் சோதனை நடத்திய போது கீழ்க்கண்ட தங்கப் பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டன:
4 தங்க நெக்லஸ்கள்
1 பென்டன்
2 வளையல்கள்
2 தங்க வளையல்கள்
1 தங்க மோதிரம்
இந்த நகைகள் அனைத்து சட்டவிரோதமாக நாட்டிற்குள் கொண்டு வரப்பட்டவை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை விமான நிலைய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். தங்க நகைகளின் மதிப்பு மற்றும் சட்டவிரோத வணிகத்தின் தொடர்புகள் பற்றிய தகவல்கள் விரைவில் வெளிக்கொணரப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
_Srilanka Tamil News_
0 Comments