வாகன இறக்குமதி தொடர்பில் மத்திய வங்கி ஆளுநரின் உறுதிமொழி!!
இலங்கையின் வாகன இறக்குமதிகள் தொடர்பில் மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் வீரசிங்க முக்கியமான கருத்துகளை தெரிவித்தார்.
தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த நேர்காணலில், அவர், நாட்டின் கடன் மறுசீரமைப்பு செயல்முறை முழுமையாக நிறைவடைந்த பின்னர், வாகன இறக்குமதிகளின் மொத்த பெறுமதி 1.5 பில்லியன் டொலர் வரை உயர்ந்தாலும், அதனால் நாட்டின் டொலர் கையிருப்பும் வெளிநாட்டு கடன்களின் மீள செலுத்துதலும் பாதிக்கப்படாது என்று உறுதியளித்தார்.
அத்துடன், அவசியமான கடன் மீளசெலுத்தல்களை மேற்கொள்வதற்கும், அரசாங்க வருவாயை உயர்த்துவதற்கும் சீரான திட்டங்கள் அமுல்படுத்தப்பட்டுள்ளதாகவும், அது பொருளாதாரத்துக்கு வலுச்சேர்க்கும் எனவும் அவர் தெரிவித்தார்.
பணச்சுருக்கம் மற்றும் உயர் பெறுமதிசேர் வரி காரணமாக இறக்குமதி செய்யப்படும் வாகனங்களின் பெறுமதி அதிகரித்துள்ளதாகவும், இது நாட்டின் பொருளாதார மேலாண்மையின் நிலைப்பாட்டைக் காட்டுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இந்த முன்னெடுப்புகள், பொருளாதார வளர்ச்சியையும் வெளிநாட்டு நிதி நிலைப்பாட்டையும் உறுதிப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.
_Srilanka Tamil News_
0 Comments