Ticker

10/recent/ticker-posts

நுவரெலியா தலகல ஓயா ஆற்றில் இருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்பு!!

 

நுவரெலியா தலகல ஓயா ஆற்றில் இருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்பு!!

நுவரெலியா கிரகறி வாவிக்குச் செல்லும் தலகல ஓயா ஆற்றில் இருந்து இன்று (25.01.2025) ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

மீட்கப்பட்டவர், நுவரெலியா மாநகரசபையில் பணியாற்றிய ஹாவாஎலிய பிரதேசத்தை சேர்ந்த 3 பிள்ளைகளின் தந்தையான செல்வராஜ் நடராஜ் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.


சம்பவத்திற்கு முன்னர், அவர் பயணித்த மோட்டார் சைக்கிள், நேற்று இரவு நுவரெலியா மத்திய மாகா வித்தியாலயத்திற்கு அருகிலுள்ள உடப்புசல்லாவ குறுக்கு வீதியில் கிடந்தது. பிரதேச மக்கள் கண்டறிந்து, பொலிஸாருக்கு தகவல் அளித்தனர்.

பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்தபோது, மோட்டார் சைக்கிள் மற்றும் அவரது தலைக்கவசம் கிடந்ததை கண்டனர். ஆனால், விபத்துக்குள்ளான நபர் தொடர்பில் எந்தவித தகவலும் கிடைக்காததால், மோட்டார் சைக்கிள் மட்டுமே பொலிஸாருடன் எடுத்துச் செல்லப்பட்டது.

இன்று காலை, உறவினர்கள் மற்றும் பிரதேச மக்கள் இணைந்து தேடுதல் நடத்தினர். தேடுதலின் போது, அவர் கிரகறி வாவிக்குச் செல்லும் தலகல ஓயா ஆற்றில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

பொலிஸாருக்கு தகவல் அளிக்கப்பட்டதையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசாரும், தடயவியல் பொலிஸாரும் விசாரணைகளை மேற்கொண்டனர். மாவட்ட நீதிமன்ற நீதிவான் சடலத்தை பார்வையிட்டு, சட்ட வைத்திய பரிசோதனைக்காக நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது.

சம்பவம் தொடர்பாக பொலிஸார் பல்வேறு கோணங்களில் விசாரணையை முன்னெடுத்து வருகின்றனர்.

Srilanka Tamil News


Post a Comment

0 Comments