இலங்கை அரசின் புதிய வெளியுறவு பயண வழிகாட்டுதல்கள்: அமைச்சர்களுக்கான சிறப்பு நெறிமுறைகள்!!
இலங்கை அரசின் வெளியுறவு தொடர்புகளை சீரமைக்க புதிய வழிகாட்டுதல்கள் அறியப்படுத்தப்பட்டுள்ளன. இவை, அமைச்சர்கள், மூத்த அதிகாரிகள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு சர்வதேச நிகழ்ச்சிகள் மற்றும் உத்தியோகபூர்வ பயணங்களை மேற்கொள்ளும் போது பின்பற்ற வேண்டிய நெறிமுறைகளை உள்ளடக்கியவை.
புதிய வழிகாட்டுதல்களின் முக்கிய அம்சங்கள்:
1. அமைச்சர்கள் மற்றும் மூத்த அதிகாரிகளுக்கான பயண அனுமதி:
இராஜதந்திர விழாக்களில் கலந்து கொள்வது, சர்வதேச மற்றும் பிராந்திய மாநாடுகள் அல்லது கருத்தரங்குகளை இலங்கையில் நடத்துவது உள்ளிட்ட பயணங்களுக்கு, வெளியுறவு அமைச்சகத்தின் அனுமதி பெற வேண்டும்.
வெளிநாட்டு பிரமுகர்களுடன் சந்திப்புகள் அல்லது சர்வதேச அழைப்புகளுக்கான பயணங்களை முன்னெடுக்குவதற்கான கோரிக்கைகள், நெறிமுறைகளுக்கேற்ப சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
2. வீசா அனுமதிகளுக்கான புதிய நடைமுறை:
வீசா உதவிக்கான கோரிக்கைகள் தற்போது, வெளியுறவு அமைச்சகத்தின் ஊடாகவே செய்யப்பட வேண்டும்.
நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வீசா உதவி கோரிக்கைகளை நாடாளுமன்ற செயலாளர் நாயகம் சமர்ப்பிக்க வேண்டும்.
3. பயணத் திகதிக்கு முன்பு வீசா கோரிக்கை:
உத்தியோகபூர்வ பயணங்களுக்கு இலங்கைத் தூதரகம் மூலம் விசாவைப் பெற விரும்பும் பயணிகள், பயணத் திகதிக்கு குறைந்தது மூன்று வாரங்களுக்கு முன்பாக அத்தகைய கோரிக்கைகளை முன்வைக்க வேண்டும்.
இந்த புதிய வழிகாட்டுதல்கள், நாட்டின் வெளியுறவு கொள்கையின் ஒழுங்கு மற்றும் சீருடமைக்கு முக்கியமான பங்காற்றும் என அரசாங்கம் கூறியுள்ளது.
0 Comments