Ticker

10/recent/ticker-posts

வவுனியாவில் மின்சாரம் தாக்கி குடும்பஸ்தர் உயிரிழப்பு!!

 வவுனியாவில் மின்கசிவில் 45 வயது குடும்பஸ்தர் பரிதாபமாக உயிரிழந்தார்!!

வவுனியாவில் உள்ள குடியிருப்பு பிள்ளையார் ஆலயத்தில் நடந்த பரிதாபமான சம்பவத்தில், 45 வயதுடைய குடும்பஸ்தர் ஒருவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில், ஆலயத்தில் அமைந்துள்ள கேணியை துப்புரவாக்கும் பணியில் தொண்டர்கள் ஈடுபட்டிருந்த போது, நீர் இறைக்கும் இயந்திரத்தில் மின்கசிவு ஏற்பட்டது. இதன் காரணமாக, அந்த பணியில் ஈடுபட்ட குடும்பஸ்தர் படுகாயமடைந்தார்.

உடனடியாக அவரை மீட்டுப் பின், வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

இந்த சம்பவம் தொடர்பாக வவுனியா பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

_Srilanka Tamil News_


Post a Comment

0 Comments