அர்ச்சுனா எம்.பியை கைது செய்யுமாறு அதிரடி உத்தரவு!!
அனுராதபுரம், ஜனவரி 21:
நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா தொடர்பில் புதிய சர்ச்சை உருவாகியுள்ளது. அனுராதபுரம் - ரம்பேவ பகுதியில் இன்று (21) காலை, நாடாளுமன்றத்திற்கு சென்று கொண்டிருந்த போது, போக்குவரத்துப் பொலிஸாரின் உத்தரவுகளை புறக்கணித்து, அவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இதன்போது, கடமையில் இருந்த பொலிஸ் அதிகாரிகள், நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனாவிடம் அவரது அடையாள அட்டை மற்றும் சாரதி அனுமதிப்பத்திரத்தை கோரியதாகவும், இதனால் நிலைமை மோசமடைந்ததாகவும் கூறப்படுகிறது.
இந்த சம்பவம் தொடர்பாக, அனுராதபுரம் நீதிமன்றத்தில் பொலிஸ் அதிகாரிகள் அனைத்து ஆதாரங்களையும் இன்று சமர்ப்பித்தனர். இதனையடுத்து, நீதிமன்றம் நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவை கைது செய்யும் உத்தரவை பிறப்பித்தது.
பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்க, இதன் தொடர்பாக செய்தியாளர்களிடம் கருத்து தெரிவிக்கையில், "இவ்விவகாரம் குறித்து சட்டரீதியான நடவடிக்கைகள் விரைவாக முன்னெடுக்கப்படும். எம்.பி. அர்ச்சுனா எந்த நேரத்திலும் கைது செய்யப்படலாம்" என்று தெரிவித்தார்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகள் மற்றும் நாளைய நாடாளுமன்ற அமர்வுக்கு இது விளைவிக்கக் கூடிய அரசியல் தாக்கங்கள் குறித்து அனைவரும் ஆர்வமாக உள்ளனர்.
Srilanka Tamil News
0 Comments