Ticker

10/recent/ticker-posts

வாகன பதிவு மோசடி: முன்னாள் அரசியல்வாதியின் தந்தை மற்றும் சகோதரர் கைது!!

 வாகன பதிவு மோசடி: முன்னாள் அரசியல்வாதியின் தந்தை மற்றும் சகோதரர் கைது!!

20 வருடங்களுக்கு முன்னர் உழவு இயந்திர வாகன பதிவு இலக்கத்தில் பதிவு செய்யப்பட்ட சொகுசு ஜீப் வண்டியுடன் தொடர்புடைய வாகன பதிவு மோசடி சம்பவத்தில், முன்னாள் அரசியல்வாதியினரின் தந்தை மற்றும் அவரின் சகோதரர் கைது செய்யப்பட்டனர்.

பாணந்துறை வலான மோசடித் தடுப்புப் பிரிவின் பொலிஸார், வாகனங்களுக்கு போலியான பதிவுகள் செய்து அதற்கான வருமான வரி தவிர்க்கப்பட்டுள்ளதாகக் கண்டறிந்தனர். அவற்றைத் தவிர்க்க, இந்த முறையில் பதிவு செய்யப்பட்ட வாகனங்கள் தவறான இலக்கத்தில் இருந்ததாகவும், இவற்றின் உரிமையாளர்கள் கடந்த காலங்களில் வருமான வரி செலுத்தவில்லை என தெரியவந்துள்ளது.

மேலும், முன்னாள் அரசியல்வாதியின் சகோதரர் போலியான வாகனப் பதிவுகளுடன் கூடிய வாகன பதிவுப் புத்தகங்களை வைத்திருந்த நிலையில், அவரும் அண்மையில் கைது செய்யப்பட்டார்.

வலானை மோசடித் தடுப்புப் பொலிஸார் இந்த மோசடி தொடர்பான விசாரணைகளை தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர், மேலும் இந்த துறையில் மேலும் பல மோசடிகள் வெளிச்சத்துக்கு வருமென எதிர்பார்க்கப்படுகிறது.

_Srilanka Tamil News_

Post a Comment

0 Comments