புதிய டிஜிட்டல் அடையாள அட்டை வழங்கும் செயல்முறை இறுதி கட்டத்தில் – ஆட்பதிவு திணைக்களம் அறிவிப்பு!!
கொழும்பு: புதிய டிஜிட்டல் அடையாள அட்டை வழங்குவதற்கான செயல்முறை தற்போது இறுதி கட்டத்தில் உள்ளதாக ஆட்பதிவு திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் எம்.எஸ்.பி. சூரியப்பெரும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, தொலைந்து போன அடையாள அட்டை மீண்டும் பெற காத்திருப்பவர்கள், பெயர் மற்றும் முகவரி மாற்றப்பட்டிருந்தால், அதன் காரணத்தையும், ஏற்கனவே உள்ள அடையாள அட்டை தொலைந்தமைக்கான சரியான காரணத்தை விளக்கவும், பொலிஸ் அறிக்கையுடன் திணைக்களத்திற்கு முன்னிலையில் வருமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், கிராம அலுவலர்களுக்கு இந்த செயல்முறையை எவ்வாறு மேற்கொள்ள வேண்டும் என்பது குறித்து அறிவிக்கப்பட்டுள்ளதாகவும், எதிர்காலத்தில் பொதுமக்களுக்கு துண்டுப்பிரசுரங்கள் விநியோகிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.
இதன் மூலம், புதிய டிஜிட்டல் அடையாள அட்டை வழங்கும் திட்டம் மக்களுக்கு எளிதாக செயல்படுத்தப்பட உள்ளதாக தெரிகின்றது.
_Srilanka Tamil News_
0 Comments