கம்பளையில் மரக்கறி தோட்டத்தில் ஆணின் சடலம் மீட்பு!!
கம்பளை - தவுலகல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில், இன்று (20) காலை கொட்டகதெனிய பிரதேசத்தில் உள்ள மரக்கறி தோட்டத்தில் 62 வயதுடைய ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. சடலமாக மீட்கப்பட்ட நபர் கடுகண்ணாவ- முதலிவத்த பிரதேசத்தில் வசித்து வந்த கே.ஜீ. விஜேரத்தின என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
குறித்த நபர், 18ஆம் திகதி தவுலகல கொட்டகதெனிய பிரதேசத்தில் உள்ள வீட்டில் வசிக்கும் நபரை சந்திக்க வந்தார். அன்றைய தினம், அவர் 19ஆம் திகதி காலை வீட்டை வீட்டு கடுகண்ணாவ பிரதேசத்திற்கு செல்லப்போவதாக கூறி புறப்பட்டார்.
ஆனால், அந்த வீட்டுக்கு அருகிலுள்ள கத்தரிக்காய் தோட்டத்தில் யாருக்கும் தெரியாமல் கத்தரிக்காய் பிடிக்கச் சென்று, அங்கு அமைக்கப்பட்ட மின்சார கம்பியுடன் பட்டு உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பாக பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
0 Comments