மட்டக்களப்பில் பாரிய கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகை!!
மட்டக்களப்பில், கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மண்முனை பிரதேசத்தில் செயல்பட்டு வந்த பாரிய கசிப்பு உற்பத்தி நிலையம் பொலிஸ் விசாரணை பிரிவினரால் 28.01.2025 அன்று முற்றுகையிடப்பட்டது.
இச்சுற்றிவளைப்பின் போது, 23 பரல்களில் சுமார் 14,50,000 மில்லி லீட்டர் கோடா மற்றும் 750 போத்தல்களில் 5,25,000 மில்லி லீட்டர் கசிப்பு என்பன பொலிஸாரால் கைப்பற்றப்பட்டன.
பொலிஸாரின் வாகன விசாரணையிலும், சந்தேக நபர்கள் தப்பியோடியுள்ளனர். குறித்த பொருட்கள் கொக்கட்டிச்சோலை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன மற்றும் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் தொடர்ந்துள்ளன.
இந்த சம்பவம் தொடர்பாக பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
Srilanka Tamil News
0 Comments